சென்னை:
விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியை சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையை தண்ணீரால் சூழப்பட்டு தத்தளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்ச்சேதம் மற்றும் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டது யாராலும் மறக்க முடியாத ஒன்று.
இன்னும் 2 மாதங்களில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஏரியின் பல்வேறு பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி கரையின் மீது 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தடுப்பு சுவர்களும், மதகுகளில் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டு விரைவுப்படுத்தி வருகின்றனர்.