புதுடில்லி:
ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. என்ன தெரியுங்களா? மகாத்மா காந்தி பிரேக் டான்ஸ் ஆடுவது போன்ற அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோதான் அது.


என்ன விஷயம்ன்னா... செப்டம்பர் 3ம் தேதி யூட்யூப்பில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் மகாத்மா காந்தி பிரேக் டான்ஸ் ஆடுகிறார். அவரின் பின்னணியில் பார்லிமெண்ட் கட்டிடம் தீப்பற்றி எரிகிறது. 


காந்தி என்ன பாடுகிறார் தெரியுங்களா? நாடு முழுவதும் ஊழல், லஞ்ச மயமாக மாறி விட்டது. வாழ்க்கையில் பணம்தான் முக்கியம் என்று ஆகி விட்டது என்று.


அத்தோடு விட்டாரா காந்தி... மேலும் பாடுகிறார்... வாழ்க்கையின் பாதையும் நேர் வழியில் இருந்து மாறி விட்டது. சத்தியாகிரகம் தனக்கு எதையும் பெற்றுத்தரவில்லை. அதனால் ஏமாற்றுத்தனம் என்ற கொடியை பிடிக்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டேன் என்று சொல்வதுபோல் பாடல் பதிவிடப்பட்டுள்ளது.


இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதை யார் பதிவிட்டார்கள் என்பது தெரியவில்லை. 


Find out more: