சென்னை:
சில வார்த்தைகளை சொல்லவே கூடாது... சிலரிடம்... என்ன தெரியுங்களா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... டாக்டரிடமும், வக்கீலிடமும் என்று நம்ம நாட்டுல பொதுவான கருத்து உண்டு.
ஏன் ரமணா படத்திலும் கூட இறந்த உடலுக்கு வைத்தியம் செய்யும் காட்சிகள் உண்மையை உணர்த்தியதுதானே. இப்போதும் பல இடங்களில் அதுபோன்ற செயல்களை நாம் கேள்விப்படுகிறோமே. சின்ன தலைவலிக்கு வெற்றிலையை கிள்ளி வைத்து சரிசெய்தது அந்த காலம்... இப்போதோ... ரத்த பரிசோதனையில் ஆரம்பித்து ஸ்கேன் வரை இழுத்து விடுவது இந்த காலம்.
ஆனால் "பழங்காலத்து சீனாவில் என்ன முறை தெரியுங்களா? நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் குணமடைந்தால் மட்டுமே பணம் வாங்குவார்கள் அந்த கால டாக்டர்கள்." இன்றைக்கு ஆஸ்பத்திரியில் சேர்வதற்கே பணம் கட்டினால்தான் என்ட்ரியே கொடுக்க முடியும். அரிய தகவலில் முதல்...