இயக்குனரும், கதை ஆசிரியரும், நடிகருமான கே.பாக்கியராஜின் மகன் ஷாந்தனு தற்போது 'முப்பரிமாணம்' என்ற புது திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டீசரை நடிகர் விஜய் பார்த்து ரசித்து, ஷாந்தனுவை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சாந்தனு தனது சமூக வலைதள பக்கத்தில், ''இந்த மெசேஜில் நான் கண்விழித்தேன்....'டீசர் அற்புதம் நண்பா, குட் லக்' என்னுடைய அண்ணன் @நடிகர் விஜய் தெறி பேபி'' என்று டிவிட் செய்துள்ளார்.