நாம் கடவுளை நினைத்து, பக்தியோடு விரதம் இருக்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் நம் விரதம் முழுமை அடையும். மேலும் கடவுளும் ஏற்று கொள்வார்.


அத்தகைய வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். 


விரதம் மேற்கொள்வதற்கு முந்தய நாளில், வீடை சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும். 


பூஜை அறையில், விளக்குகள் சாமி படங்கள் உள்ளிட்டவற்றை துடைத்து, சுத்தபத்தமாக வைக்க வேண்டும். 


விரதம் இருக்கும் நாள் அன்று காலையில் குளித்த பிறகு தான், பூஜை அறையில் கால் அடி எடுத்து வைக்க வேண்டும். 


விரத காலத்தில் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருத்தல் மிகவும் நல்லதாகும். 


பசிக்கும் போது, வாழைப்பழம் மற்றும் பால், பழசாறு ஆகியவற்றை அருந்தலாம். 


விரத சமயத்தில் சிற்றுண்டிகள் சாப்பிடுவதை விட, பழங்கள், பால் உள்ளிட்ட பானங்களை அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம்.


விரதத்தை முடிக்கும் போது கடவுளுக்கு பூஜை செய்து நிறைவு செய்ய வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: