சென்னை:
படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் என்று ட்வீட் போட்டு அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார். இதுவரை பாலிவிட் படங்கள் பற்றி பேசாத ரஜினியா என்று அனைவரும் ஆச்சரியத்தில் மிதக்கின்றனர்.


கபாலி படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த போதும் இந்த படத்தின் வசூல் இமய மலை அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. 


ரஜினி பாலிவுட் பிரபலங்களுடன் சகஜமாக பழகக் கூடியவர்தான். ஆனால் இதுவரை இவர் எந்த ஒரு பாலிவுட் படத்தையும் பாராட்டியோ, வாழ்த்துக்கள் கூறியோ டுவிட்டோ போட்டதே இல்லை.


இந்நிலையில் முதன்முறையாக அக்சய் குமார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி டுவிட் செய்துள்ளார் நம்ப கபாலி சார். இதை பார்த்து உடனே நன்றி தெரிவித்து அவரும் பதில் டுவிட் போட்டுள்ளார்... நடத்துங்கப்பா... நடத்துங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: