மாஸ் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, 'சென்னை 600028 - 2' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், விஜய் வசந்த், ஆகாஷ், பிரேம்ஜி, விஜயலக்ஷ்மி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு தனது 'பிளாக் டிக்கட் கம்பெனி' சார்பில் தயாரித்துள்ளார்.


இதன் படப்பிடிப்பு தென்காசி, தேனி, குற்றாலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. இதையடுத்து இதன் பின்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. 


இந்நிலையில் இந்த படத்தை வரும் நவம்பர் 10-ந்தேதி, திரையில் வெளியிட வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


மேலும், கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய 'மாஸ்' திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறாததால், அவர் இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: