புதுடில்லி:
நிழல் உலக தாதா தாவூத்திடமே அவரது கூட்டாளியே கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆன தகவல் தற்போது வெளியில் வந்துள்ளது.
இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்து ரூ.40 கோடியை அவரது கூட்டாளியே சுருட்டிக்கொண்டு எஸ்கேப்பாம். இது தொடர்பாக தாவூத் ஆட்கள் விசாரித்து வருகிறார்களாம்.
இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் என்ன சொல்லியிருக்காங்க என்றால்... காலிக் அஹமத் என்பவன், டில்லியை சேர்ந்தவரிடம் ரூ.45 கோடியை தாவூத்திற்காக வாங்கியுள்ளான்.
இதில் ரூ.40 கோடியை வெளிநாட்டில் உள்ள தனது ஆட்களுக்கு ஹவாலா மூலம் அனுப்பி விட்டு, தான் ரூ.5 கோடி வைத்துக் கொண்டுள்ளான். இந்த சுருட்டல் நடந்தவுடன் காலிக்கும் தலைமறைவு. திருடன்கிட்டேயே தெட்டறது என்பது இதுதானோ!
இது தொடர்பாக பாகிஸ்தானில் வசிக்கும் தாவூத் ஆட்கள் காலிக் அகமது மற்றும் ஜாபீர் மொடி இடையே நடந்த மொபைல் பேச்சை ஒட்டுக்கேட்டதன் மூலம்தான் இந்த சம்பவமே வெளியில் வந்துள்ளது.
இதையடுத்து டில்லியிலிருந்து தாவூத் ஆட்கள் கனடாவுக்கு சென்று விசாரிக்க அனுப்பப்பட்டுள்ளனர். மோசடி செய்த காலிக் அஹமத் மணிப்பூரில் பதுங்கியுள்ளனாம்.
அவன் ஆட்டையை போட்ட ரூ.40 கோடியை தனது ஆட்கள் மூலம் பனாமா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது எப்படி இருக்கு!