பாகுபலி படத்தின் பிரமாண்டம், வசூலை தாண்டியே தீர வேண்டிய கட்டாய நிலமையில் இருக்கிறது இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமான ரஜினி - ஷங்கரின் 2.ஓ. இந்தப் படத்தில் ரஜினி ரோபோ மற்றும் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார்.படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் வேறு எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு பிரமாண்டம் மற்றும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகின்றனர் ஷங்கர் குழுவினர்.

இந்தப் படத்தை ஒரே நேரத்தில் மொத்தம் 15 மொழிகளில் நூறுக்கும் அதிகமான நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம். முதல் முதலாக 11000 அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற கிரிடமும் பெருமையையும் இந்தப் படம் பெறவிருக்கிறது. தமிழ் இந்தியில் வெளியாகும்போதே, சீனாவிலும் வெளியிடும் திட்டமுள்ளதாம்.
சீனாவில் ஒரே நேரத்தில் வெளியிட்டால் தியேட்டர் எண்ணிக்கை இன்னும் இதை விட அதிகமாகக் கூடும். அதாவது அவதாருக்கு நிகரான எண்ணிக்கையில் தியேட்டர்களில் 2.ஓ வெளியாகும் வாய்ப்பு உள்ளது. விநியோகம், திரையிடல், அதற்கான தியேட்டர்களை ஒப்பந்தம் செய்வது போன்ற வேலைகளில் இப்போதே மும்முரமாக தொடங்கி விட்டது லைகா நிறுவனம்.
click and follow Indiaherald WhatsApp channel