கொச்சி:
செம ரெஸ்பான்ஸ் என்று கேரளாவிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கபாலி படம் குறித்த செய்தி இல்லீங்க... மத்திய அரசால் சமீபத்தில் தொடங்கப்பட்ட புனித கங்கை நதிநீர் திட்டத்துக்குதான் கேரளாவில் செம ரெஸ்பான்சாம். 


உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதிநீர் சேகரிக்கப்பட்டு, டில்லிக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் அந்த நீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


சமீபத்தில், டில்லியிலிருந்து கேரள மாநிலத்துக்கு 549 பாட்டில்களில் கங்கை நீர் விற்பனைக்கு வந்தது. இதில் கோழிக்கோடு தபால் நிலையத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 150 பாட்டில் கங்கை புனித நீர் விற்பனையாகி விட்டதாம்.


கேரளாவில் உள்ள மற்ற தபால் நிலையங்களிலும், கங்கை நீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால் தங்கள் மாநிலத்துக்கு மேலும் அதிக பாட்டில்களை அனுப்பி வைக்கும்படி கேரள தபால் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கேரளாவில் செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளதால் இதை மேலும் புரமோட் செய்ய பல வழிகளை மத்திய அரசு யோசித்து வருகிறதாம்.


Find out more: