புதுடில்லி:
மழை... மழை... கனமழையாக... இப்போ 91 அணைகள் தங்களை உயர்த்திக் கொண்டுள்ளன. நீர்நிலையால்... என்ன விஷயம் என்றால்..


நாட்டின் முக்கிய நீர்நிலை பகுதிகளில் கடந்த வாரம் பெய்ய ஆரம்பித்த மழை...  கனமழையாக மாற்றம் பெற இதனால் 91 அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர துவங்கியுள்ளது.


கடந்த ஆண்டை விடவும், 10 ஆண்டு சராசரியை விடவும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. கங்கா, நர்மதா, கோதாவரி ஆகிய நதிகளில் கடந்த 10 ஆண்டுகளின் சராசரியை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.


28-க்கும் மேற்பட்ட அணைகளில் சென்ற ஆண்டை விட நீர் இருப்பு அதிகமாக காணப்படுகிறது. 37 அணைகளில் 10 ஆண்டு சராசரியை விட அதிகளவில் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நாட்டின் பெரும்பாலான நீர்நிலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... இருக்கு... என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்ற தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  


Find out more: