பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலை சாலையில் உள்ள செல்லப்பம்பாளையம் பிரிவில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த நட்ராஜ், ஆனந்தகிருஷ்ணன், திருமுருகன், பநீநிதி, ஜெயலக்ஷ்மி ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த 3 பேர் கோவை அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.