சென்னை:
கோழி பார்ட் 2 சம்பந்தமா கருப்பு நடிகருக்கும், சிவப்பு இயக்குனருக்கும் இருந்த முட்டல் மோதல் இப்போ சரியாயிடுச்சாம்.  


"கோழி" படம்தான் கருப்பு நடிகரை ஆக்சன் வீரரா மாத்திச்சு என்று சொன்னால் மிகையில்லை. இந்த படத்தோட அடுத்த பாகம் எடுப்போம்னு இயக்குனரும், நடிகரும் அப்பவே அலாரம் வைக்காம முழிச்சு, முழிச்சு சொன்னது பழங்கதை.


இந்த படத்தோட 2ம் பாகம் பற்றி பேச்சு மீண்டும் எழுந்து தேதிகளும் கொடுத்தாரு கருப்பு நடிகரு. ஆனால் படம் தொடங்கறாப்பல தெரியாததால் கொதிச்சு போய் பஞ்சாயத்தெல்லாம் நடந்துச்சு. அப்புறம் இடையில 2 பேரும் பேசிக்கவே இல்ல. இப்ப லடாய் தீர்ந்து போய் மீண்டும் பார்ட் 2 எடுக்க பேசிக்கிட்டு இருக்காங்களாம். 


இப்பவாச்சும் படத்தோட பார்ட் 2வை எடுங்கப்பா.. உங்க பஞ்சாயத்தை பார்ட் 2 ஆக்கிடாதீங்கன்னு ரசிகர்கள் நொந்துபோய் சொல்றாங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: