மும்பை:
ஞாபகம் இருக்கிறதா... நிலாவை... ஏங்க அது என்ன பஞ்சுமிட்டாயா மறைஞ்சு போறதுக்கு... இரவானால் வருமே... என்று சொல்லக்கூடாது. இது அந்த நிலா இல்ல...


அன்பே ஆருயிரே படம் மூலம் இயக்குனர் சூர்யாவால் அறிமுகம்  செய்யப்பட்டாரே... ஆங்.... ஞாபகம் வந்திடுச்சா... அதே நிலாதான்.  ரொம்ப காலம் காணாமல் போனவர்கள் லிஸ்டில் இடம் பிடித்து இருந்தார்.


அப்புறம் தன் அபிமான இயக்குனர் சூர்யாவின் இசை படத்தில் ஒரு சின்ன ரோலில் தலைக்காட்டி மறைந்தவர் தற்போது மீண்டும் வந்து இருக்கார். வந்த வேகத்தில் பிஸியும் ஆகிவிட்டார். தமிழில் இல்லீங்க... பாலிவுட்டில்தான். இப்போ  ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே நடித்து வருகிறார். இவர் நடித்த சின்ன பட்ஜெட் படம் சூப்பராக ஹிட் அடிக்க இப்போ இந்த அம்மணியின் கைகளில் ஏராளமான படங்களாம். அப்படியோ தமிழில் வாய்ப்பு கேட்டும் இயக்குனர் சூர்யாவிடமும் சொல்லியிருக்காராம்... வாங்கம்மா... வாங்க... 


Find out more: