சென்னை:
நாட்டாமை நடிகரோட தீர்ப்பு இங்க மட்டும்தான் செல்லுபடியாகும் போலிருக்கு... அங்க இவரு வேற மாதிரி. எப்படி தெரியுங்களா?


நம்ம நாட்டாமை நடிகரு... கன்னட தேசத்துல புனீத் ராஜ்குமாருக்கு அப்பாவாக வேடம் கட்ட வந்த வாய்ப்பை பெவிக்கால் போட்டது மாதிரி கப்புன்னு பிடிச்சுக்கிட்டாரு. இப்ப எம்எல்ஏ பதவியும் இல்ல. சும்மா இருக்கிறதுக்கு பதிலா இப்படி அக்கட தேசம், இக்கட தேசம்னு நடிப்பு திறமையை காட்டலாம்னு முடிவு செஞ்சிருக்காராம்.


அங்க கிடைக்கிற அப்பா, தாத்தா வேஷத்துக்கு கூட தலையாட்டறவரு... நம்ம கோலிவுட்டுல மட்டும் ஹீரோ வேஷம்தான் போடுவேன்னு பிடிவாதமாக இருக்காராம்... நாட்டாமை இது தீர்ப்பே இல்லையே...


మరింత సమాచారం తెలుసుకోండి: