சென்னை:
உஷ்... அப்பா என்ன புழுக்கம்... தாங்கமுடியலையே... இதுவே கடற்கரையாக இருந்தால் காற்று அதிகமாக இருக்குமே... இப்படியான டயலாக் கண்டிப்பாக கேட்டு இருப்பீங்க...


அப்போ... கடற்கரையில் மட்டும் காற்று வேகமாக வீசுது. மற்ற இடங்களில் ஓரவாஞ்சனை காட்டுதா? காற்றுக்கும், தண்ணீருக்கும் ஏதுங்க ஓரவாஞ்சனை. இவங்களுக்கு மட்டும் வீசுவோம்... இவர்கள் மட்டும் குடிக்கட்டும் என்று! விஷயம் என்னன்னா... கடலுக்கு அருகே தடுப்புகள் எதுவும் இல்லை. அதனால் நான்கு புறங்களில் இருந்து காற்று வீசுவதை நம்மால் உணர முடிகிறது.


இதே டவுனில் பக்கத்து வீட்டுகாரர் ஒரு மாடி வீடு கட்டினா... பக்கத்தில் இருக்கிறவங்க... 3 மாடி... 4 மாடி இல்ல கட்டுறாங்க... அப்புறம் எப்படி காற்று வரும். கடலுக்கு அருகிலும் சரி...  தொலைவிலும் காற்று சமமாகத்தான் வீசுகிறது. பருவ காலங்களுக்கு ஏற்ப காற்றின் திசையும், வேகமும் மட்டும்தான் வேறுபடுகிறது. அவ்வளவுதான். இதுதான் வேறுபாடு தரைப்பரப்பில் மரங்கள்... உயர்ந்த கட்டிடங்கள் தடுப்பாக இருப்பதால் காற்று வீசுவதை நம்மால் உணர முடியவில்லை. இது அறிந்த கொண்டதில் இரண்டு.


Find out more: