சென்னை:
யார் அவரு... யார் அவரு... என்று விசாரித்து ஆச்சரியப்பட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் ஒருவர். என்ன விஷயம் என்றால்...
தமிழக ப்ரீமியர் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து வருதுல்ல... இதில்தான் ஒரு விஷயம் நேற்று அரங்கேறி உள்ளது. நேற்று நடந்த போட்டியில் "ஆலுமா டோலுமா" என்று வேதாளம் படத்தின் பாடலை ஒலிப்பரப்பு செய்துள்ளனர்.
எப்பவுமே அஜித் பாட்டுகள் என்றால் அவரது ரசிகர்கள் அதகளம் செய்வார்கள். அப்படிதான் நடந்துள்ளது நேற்றும். எப்படி அரங்கமே தல..தல...தல என்று அதிரடிக்க... அப்போது அங்கிருந்த பிரபல கிரிக்கெட் வீரர் ப்ரெட்லீ ‘யார் இந்த தல’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அப்போது அருகில் இருந்த தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர், அவர் பெயர் அஜித். இங்கு மிகப்பெரிய நடிகர் அவர். அவரது ரசிகர்கள் அனைவரும் அவரை செல்லமாக "தல" என்றுதான் அழைப்பார்கள்’ என்று சொல்ல... வியப்புடன் ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு களித்துள்ளார் ப்ரெட்லீ...
தலன்னா சும்மா... அரங்கம் மட்டுமா அதிரும்.. உலகமே அதிரும்ல் என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்...