இசையமைப்பாளர் அனிருத் தற்போது 'ரம்' திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் முக்கிய ரோலில் காமெடி நடிகர் விவேக்கும் நடிக்கின்றனர். 


இந்நிலையில் இந்த படத்தில், பாடலாசிரியர் விவேக் எழுதிய 'பேயோபோபிலியா' என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல், சிம்புவின் குரலில் உருவாகினால் சிறப்பாக இருக்கும் என்று கருதி, அனிருத் அவரை கேட்டுள்ளார். 


தயக்கம் எதுவும் இல்லாமல் உடனே ஓகே சொல்லி, இந்த பாடலை சிம்பு வெற்றிகரமாக பாடி முடித்துள்ளார். 'பீப் சங்கிற்கு' பிறகு சிம்பு அனிருத் கூட்டணியில் உருவாகிய ''பேயோபோபிலியா'' இந்த பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: