பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ரோப் பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் அவரே வெளியிட்டார்.

குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் சற்று பூசினாற் போன்ற உடல்வாகு உள்ளவர் சோனாக்ஷி சின்ஹா. அதற்காக தன்னை யார் கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாத பெரிய தைரியசாலி.

தற்போது அவர் தனது உடல் எடையை கட்டுக்குள் வைத்துள்ளார் அத்ற்காக ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்கிறார். இந்நிலையில் அவர் கடுமையான ரோப் பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இரண்டு கைகளாலும் இரண்டு பெரிய கயிறுகளை பிடித்து அவர் ஒர்க்அவுட் செய்த வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நல்லா சாப்பிட வேண்டும், ஒர்க் அவுட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் பப்ளி சோனாக்ஷி. சோனாக்ஷி தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து இந்தி படம் ஒன்றில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel