தெலுங்கானா:
சோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?


சோளக் காட்டில் எலிக்கு வைத்திருந்த விஷத்தை சாப்பிட்ட 40 மான்கள் பரிதாபமாக பலியானதுதான் அது.


 தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கும்மாடம் என்ற கிராமத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளனர். பயிர்கள் விளைச்சல் நேரத்தில் வயலில் புகுந்து  எலிகள் நாசம் செய்து வந்தன. இதனால் அவற்றை கொல்ல தீவனத்தில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து உருண்டையாக  உருட்டி எலிகள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வைத்திருந்தனர்.


 இங்குதான் வினை விளையாட்டை காட்ட வனப்பகுதியில் இருந்து வயலுக்குள் புகுந்தன 40க்கும் அதிகமான மான்கள். அந்த மான்கள் வயலில் விஷம் கலந்து வைக்கப்பட்டு இருந்த உருண்டைகளை சாப்பிட்ட விஷம் ரத்தத்தில் பரவி ஒவ்வொன்றாக அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தன.


காலையில் வயலுக்கு வந்த விவசாயிகள் மான்கள் இறந்து கிடப்பதை பார்த்து வெகுவாக அதிர்ச்சியடைந்தனர். உடன் போலீசாருக்கு தகவல் பறந்தது. தொடர்ந்து போலீசாரும், மருத்துவக்குழுவினரும் அங்கு விரைந்து வர உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சில மான்களை கால்நடை மருத்துவமனைகளுக்கு தூக்கிச் சென்றனர். 


இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: