வாஷிங்டன்:
பெரும் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளது அசென்ஷன் தீவு என்று தகவல்கள் பரபரக்கின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாம். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவு எரிமலைகள் சூழ்ந்த தீவு கூட்டம் ஆகும்.
இந்த அசென்ஷன் தீவின் வடமேற்கே சுமார் 975 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாக பதிவாகியுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏதும் உருவாகவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறதாம்.