பிரபல மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக 2 பேரிடம் சந்தேகம் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக கர்நாடகா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரிய விளக்கம் கேட்டிருக்கிறார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது: கவுரி லங்கேஷ் படுகொலை கடும் கண்டனத்துக்குரியது. அண்மையில் அவரை நான் சந்தித்த போது கூட தமக்கு இது போன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறவில்லை. ல்புர்கி, பன்சாரே, தபோல்கர் படுகொலைகளில் பயன்படுத்தப்பட்ட அதேபோன்ற கொடுர ஆயுதமே கவுரி லங்கேஷ் கொலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவுரி லங்கேஷின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருந்த 2 பேரை பிடித்து போலீசார் தற்சமயம் விசாரித்து வருகின்றனர்.

விட்டு முடிவு செய்வோம். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு உரிய தகுந்த பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel