நடிகை நயன்தாரா, சற்குணம் தயாரிக்கும் 'டோரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாஸ் ராமஸ்வாமி இயக்குகிறார். இதில் தம்பி ராமைய்யா மற்றும் ஹரிஷ் உத்தமன் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 


பேய் கதையை கொண்டு உருவாகும் இந்த படத்தில், நயன்தாரா தான் மெயின் கேரக்டர். இதில் அவருக்கு ஜோடி யாரும் இல்லையாம்.  இதுவரை இந்த படத்தின் ஹீரோ பற்றி எந்த தகவலும் வெளிவராததால், இந்த படத்தில் நயன்தரவிற்கு ஜோடி யாரும் இல்லை என கூறப்படுகிறது. 


இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி நிலையில் உள்ளது. விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் உருவான 'மாயா' திகில் திரைப்படத்தை போல, இந்த படமும் வெற்றி பெற்று, சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: