கடந்த 19-ந்தேதி, விஜய் சேதுபதி நடிப்பில் 'தர்மதுரை' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் தற்போது திரையரங்கில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், விஜய்சேதுபதியின்  அடுத்த படம் 'றெக்க' தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளதாம்.


றெக்க திரைப்படத்தை ரத்ன சிவா இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கே.எஸ்.ரவி குமார், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


பேமிலி  என்டேர்டைனர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, கும்பகோணம், பாங்காக், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 


மேலும் இந்த படத்தின் திரையரங்கு ரிலீஸ் உரிமைகளை சிவபாலன் பெற்றுள்ளார். விரைவில் இதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் முறையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: