சென்னை:
அள்ளியது தர்மதுரை... பணக்காரத் துரை என்று பேர் வாங்கி விட்டது. எப்படி தெரியுங்களா?
தொடர்ந்து ஹிட் கொடுத்துக்கிட்டே வர்றாரு... விஜய் சேதுபதி. அதில் இப்போ தர்மதுரையும் இடம் பிடித்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை படம் பெற்றதால் முதல்முறையாக இப்படம் விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துள்ளது. ஆமாங்க... உண்மைதான்.
சென்னையில் மட்டும் தர்மதுரை... பணக்காரத் துரையாகி உள்ளது. எப்படி தெரியுங்களா? தற்போது வரை சுமார் 2.95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இந்த படம். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் இது மூன்றாவது ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.