புதுடில்லி:
ஓகே...ஓகே... பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்குதான் டில்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் டில்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதில் ஒன்றாகத்தான்மெ ட்ராஸ் உயர்நீதிமன்றம், பாம்பே உயர்நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் பெறும். பாம்பே உயர்நீதிமன்றம் இனி மும்பை உயர்நீதிமன்றம் என மாற்றப்படும். இதேபோல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயரை கொல்கத்தா உயர்நீதிமன்றமாக மாற்றவும் ஒப்புதல் அளித்துள்ளது.