மஸ்கட்:
50 பைசா ஓமன் ரியால் நாணயத்தை சிறுவன் ஒருவன் விழுங்க அது 10 நாட்களுக்கு பிறகு சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட கூத்து மஸ்கட்டில் நடந்துள்ளது.


ஓமனில் வசித்து வேலை செய்து வரும் இந்திய நாட்டை சேர்ந்தவர் சச்சின் சுந்தர். இவர் தன் மனைவி, மகனுடன் மஸ்கட் பகுதியில் வசித்து வருகிறார்.


கடந்த மாதம் 18-ம் தேதி இவரது மகன் அதர்வ் (5) 50 பைசா ஓமன் ரியால் நாணயத்தை விழுங்கி விட்டான். இதை தனது தாயிடம் கூறியுள்ளான். இதனால் வலிக்க சிறுவன் படாதபாடு பட்டுள்ளான். உடன் சச்சின் சுந்தர் வரவழைக்கப்பட்டார். 


தொடர்ந்து அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிறுவனை சேர்த்துள்ளனர். பல முயற்சிகள் செய்தும் நகருவேனா என்று அந்த நாணயம் அடம் பிடிக்க டாக்டர்கள் நொந்து போய்விட்டனர். 


இயற்கை உபாதையின் போது வெளியே வந்து விடும் என்று நினைத்த டாக்டர்கள் நினைப்பில் மண்தான் விழுந்தது. 


இப்படி 10 நாட்கள் ஓடிப்போக மீண்டும் பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அந்த சிறுவன் சேர்க்கப்பட்டான். பின்னர் அந்த நாணயம் எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இப்போ.. சிறுவன் ஹேப்பி அண்ணாச்சி... இனிமே காசை பார்த்தாலே தெறி ஓட்டம் எடுத்து விடுவான்...



మరింత సమాచారం తెలుసుకోండి: