1993-ம் ஆண்டு வெளிவந்த 'சின்ன ஜமீன்' திரைப்படத்தில் நடித்து அறிமுகமான வினிதா, சரத்குமார், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு பல திரைப்படங்கள் நடித்து வந்தார். இதையடுத்து சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும், கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். 


அதன் பிறகு சிங்கப்பூர் நாட்டில் குடியேறி, அங்கு சில வருடங்கள் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்க முடிவெடுத்துள்ளார். 


இதன் காரணமாக, 'நேற்று போல் இன்று இல்லை' என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பக்தி பாடலுக்கு, அவர் நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கு அவர் நடனம் ஆடுவதற்கு முன்பு, விரதம் இருந்து கடவுளை வழிபட்டு நடனம் ஆடினாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: