இந்தியாவின் தற்போது மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 4ஜி பிரபல போன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சு வார்த்தையின் படி தீபாவளிக்கு முன்பு 2,500 ரூபாய்க்கு அதுபோன்ற ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடத் திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இது ஜியோவிற்குப் போட்டியாக அந்தப் போனுடன் கூடுதல் பண்டில் ஆஃபராக இலவச இணையதளத் தரவு மற்றும் குரல் அழைப்புகளை ஆகிய வசதிகளை வழங்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 4ஜி போன் தயாரிப்பாளருடன் இணைந்து ஏர்டெல் பிரமோட் செய்யும் ஆனால் இதற்கு மானியம் ஏதும் வழங்காது.

அதே நேரம் பிரபல ஆண்டிராய்டு தளத்தில் அருமையாக இயங்கும் போனாகவும், அனைத்து செயலிகளையும் பதிவிறக்கம் செய்து மிகவும் பயன்பெறும் வகையிலும் இந்தப் பொன் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
click and follow Indiaherald WhatsApp channel