போலிச்சாமியார் ராம் ரஹீம் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் திடீரென காணாமல் மாயமாகிவிட்டார். அவரை தேடப்படும் நபராக ஹரியானா காவல்துறை இப்போ அறிவித்துள்ளது. வளர்ப்பு மகள் என்ற போர்வையில் அவருடன் அசிங்கமான கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஹனிப்ரீத் கணவர் ராம்ரஹீம் மீது முன்பே குற்றம்சாட்டியிருந்தார்.

இருப்பினும் ஹனிப்ரீத் தனது டிவிட்டர் கணக்கின் பயோவில், தான் தந்தையின் தேவதை என்று குறிப்பிட்டிருந்தார். பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் பாலியல் வழக்கில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ராம்ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அப்போது கோர்ட் ஹாலில் ஹனிப்ரீத் காணப்பட்டார்.

இந்த நிலையில், ஹனிப்ரீத் அதன்பிறகு எங்கே மாயமானார் என தெரியவில்லை. ஹனிப்ரீத் தேடப்படும் நபர் என்று ஹரியானா மாநில போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் எல்லா இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர். விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தேரா சச்சா அமைப்பின் அடுத்த ஆண்மீக வாரிசு என ஹனிப்ரீத் பெயர் அடிபட்ட நிலையில், அவர் மாயமாகியுள்ளது இப்போ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேரா சச்சா ஆதரவாளர் ஒருவரின் பங்காளா வீட்டில் தங்கியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராம் ரஹீம் மீதான தீர்ப்பையடுத்து கலவரம் வெடிக்க தூண்டியதில் இவருக்கு பங்குள்ளதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
click and follow Indiaherald WhatsApp channel