'வேதாளம்' திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் வென்ற லட்சுமி மேனன் தற்போது விஜய் சேதுபதி உடன் இணைந்து 'றெக்க' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் இதையடுத்து இன்னொரு திரைப்படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவா நடிக்கவுள்ள புது திரைப்படத்தில், அவருக்கு கதாநாயகியாக இவர் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்பது தலைப்பு.


இந்த படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இயக்குனர் எம்.ஜே.அருண் இந்த படத்தை இயக்கவுள்ளார்.  


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: