'தெறி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் தனது 60-வதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'அழகிய தமிழ்மகன்' திரைப்பட இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 


கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் 'தாரை தப்பட்டை', விஷாலின் 'மருது' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு மற்றும் டானியல் பாலாஜி இருவரும் வில்லனாக நடிக்கின்றனர். தற்போது மூன்றாவது வில்லனாக ஆர்.கே.சுரேஷ் இதில் நடித்து வருகிறார்.


விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: