சென்னை:
உங்களுக்கு பிடிக்காத பாடல் எதுங்க... இது பிரபல பாடகரிடம் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுங்களா?


கேள்வி கேட்கப்பட்டது பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம். அதற்கு அவர் தனது வழக்கமான டிரேட் மார்க் சிரிப்போடு பிடிக்காத பாடல் என்று ஒன்றும் கிடையாது. ஆனால்... என்று இழுத்தவர் ரஜினி நடித்த பாயும் புலி படத்தில் வரும் "ஆடி மாசம் காத்தடிக்க" பாடல் மட்டும் எனது மனதுக்கு ஒப்பாத பாடல் என்றார்.


அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான். எஸ்.ஜி.கிட்டப்பா மாதிரியே பாடணும்னு சொன்னாங்க... மிகுந்த சிரமப்பட்டு பாடினேன். படமாக்கும் போது வித்தியாசமா ஏதாவது பண்ணுவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி இல்லை. வித்தியாசமான பாடின பாட்டுக்கு வித்தியாசமா படம்பிடிச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணும் என்று வெகு ஆண்டுகளாக தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: