மும்பை:
வாட்ச் விற்பனை விளம்பரத்தில் இவ்வளவு கவர்ச்சியா... அதிரடித்த அதிகாரிகள் அபராதமும் விதித்ததுதான் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றதில் இருந்து ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் விளம்பரங்கள் என்று  பிரபலம் ஆகிவிட்டார். 


இதில் 1999 முதல் இவர் ஒரு வாட்ச் நிறுவன விளம்பர தூதுவராக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. சரி அதில் என்ன என்று கேட்கிறீர்களா? அந்த விளம்பரம்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


எப்படி தெரியுங்களா? மலேசியாவில் ஒரு வாட்ச் கடையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யாவின் விளம்பர போஸ்டரை பார்த்துவிட்டு அதிகாரிகள் அது மிகவும் கவர்ச்சியாக உள்ளது என்று கூறி அதிரடியாக நீக்க சொல்லியுள்ளனர். அதுமட்டுமா? ஒரு பெரிய தொகையை அபராதமாகவும் விதிக்க அதிர்ந்து போய் உள்ளது அந்த வாட்ச் கம்பெனி.



మరింత సమాచారం తెలుసుకోండి: