ஐதராபாத்:
நாடு போகும் போக்கு இப்படிதான் இருக்கு. என்ன விஷயம் தெரியுங்களா? ஐதராபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் என கருதப்படும் சிலர் ஐதராபாத்தில் பதுங்கி உள்ளனர். அவர்கள் பயங்கர நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என்று தேசிய புலனாய்வுத் துறைக்கு (என்.ஐ.ஏ) தகவல் கிடைத்தது.


அப்புறம் என்ன களத்தில் குதித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஐதராபாத் பழைய நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 11 பேர் சிக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவர்களில் முகமது இப்ராகிம் யாஷ்தனி, ஹபீப் முகமது, முகமது இலியாஸ் யாஷ்தனி, அப்துல்லா பின் அகமது அல் அமூடி, முசாபர் ரிஸ்வான் ஆகிய 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். 


இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கைதான 5 பேருக்கும் நிதி உதவி அளித்தவர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சிக்கினர் இரண்டு பேர். 


ஐதராபாத்தில், ஐ.எஸ். அமைப்பின் ஐதராபாத் பிரிவுக்கு தலைவராக செயல்பட்டு நாசவேலை செயல்களுக்கு நிதி திரட்டி வந்த யாசிர் நியமத்துல்லா, அதாவுல்லா ரெஹ்மான் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து இருக்காங்களாம். இப்ப சொல்லுங்க...நாடு எங்கங்க போகுது... எங்கங்க போகுது.


இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: