சென்னை:
சும்மா வெத்து பேப்பர்ல கபாலின்னு எழுதி கீழே போட்டு பாருங்க... அதுகூட செம கெத்து காட்டும்... அப்ப தலைவர் காட்டமாட்டாரா என்ன... ஆனா அவருக்கு இதெல்லாம் சும்மா ஜீ...ஜீ...ப்ப்ப்பிப்பா.


இதுக்கு முன்னாடி வந்த படங்களில் சூப்பர் ஸ்டார் கோட் சூட் போட்டு நடிச்சிருந்தாலும் இப்ப வர்ற கபாலி படத்து கோட்சூட் கூட ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கு. அது மட்டுமா... இளவயது தோற்றத்தில் வரும் ரஜினி போட்டு இருக்கும் மலேசிய உடைகளும் இனி ரசிகர்கள் மத்தியில் உலா வரும் என்று சொல்லலாம். இப்பவே இப்படி வைரலாகும் இந்த உடைகளை எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


"கபாலிக்கு" ஆடை வடித்த வடிவமைப்பாளர் அனுவர்த்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கிட்ட படம் ஆரம்பிக்கும் போதே ரஜினி சாரோட உடைகள் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று டைரக்டர்இ ரஞ்சித் கண்டிப்பாக கூறிவிட்டாராம். இதுல மேக்அப் உமன் பானு சூப்பர் ஸ்டாருக்காகவே தயாரித்த விக்கை காட்டி இதுக்கும் மேட்சாக உடைகள் இருக்கணும்னு சொல்ல... அனுவர்த்தன் தன் பாணியில வெளுத்து வாங்கி இருக்கார். இவர் உலகம் முழுக்க தேடி  வயதான தோற்றத்திற்கான கோட்சூட் லண்டன்ல எடுத்து இருக்கார். 
கோட்சூட் அல்லாத உடைகள் அது துபாயில் வாங்கியிருக்காங்க. இளமைக்காலத்து இத்தாலியில்... இப்படி தேடி தேடி எடுத்த உடைகள்தான் இப்போ டிரெண்ட் அடிச்சுக்கிட்டு வருதுங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: