சென்னை:
ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளதால் தன் உழைப்பை அள்ளி கொடுத்து வருகிறாராம் நடிகர் பரத்.


சமீபகாலமாக பரத் நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. இதனால் இவர் பீல்டில் இருக்கிறாரா இல்லியான்னு தெரியாத நிலை. தற்போது இவர் கடுகு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்துள்ள பரத் அடுத்து, தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.


 ரவி பார்கவன் என்பவர் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் ருஹானி சர்மா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பஞ்சாபை சேர்ந்தவர். ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்துக்கு, கடைசி பென்ச் கார்த்தி என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்த படங்களில் செமத்தியாக உழைத்து வருகிறாராம் பரத்... நல்லது நடக்கும்ப்பா...



మరింత సమాచారం తెలుసుకోండి: