சென்னை:
இது மட்டும் கிடைக்கலை... அது இப்போ நிறைவேறிடணும் என்று ரசிகர்கள் வேண்டிக்கிறாங்க... என்ன விஷயம் தெரியுமா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசூல் கிங் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவும் தற்போது வெளியான கபாலி வசூலில் போட்ட போடு அனைவரையும் ஆச்சரியத்தில் வாயை பிளக்க வைத்தது. இடி, மின்னலுடன் மழையும் வந்தால் எப்படி இருக்கும் அதுபோல்... கபாலி உலக அளவில் பெரும் வசூலை ஈட்டி உள்ளது.


இந்நிலையில் கபாலி படத்தை தேசிய விருதிற்கு படக்குழு அனுப்பவுள்ளதாம். இதுவரை ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த முறை ரஜினிக்கு விருது கிடைக்கும் என பல முன்னணி சினிமா விமர்சகர்களும் கூறியுள்ளனர். அப்படி கிடைத்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்...



Find out more: