சென்னை:
சீக்கரம் விடுங்கப்பா... காத்திருக்கிறோம் இல்லியா என்று ரசிகர்களை ஏங்கி தவிக்க வைத்த ரெமோ படத்தின் டிரைலர் வந்தே வந்திடுச்சு...


இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் அனைவரின் முகத்திலும் 1000 வால்ட்ஸ் பல்ப் தான் போங்க... காரணம்... செம கலர் புல்லாக, அதகளம் செய்துள்ளது டிரைலர்.


பி.சி.பநீராமின் கேமரா கலர்புல்லாக களம் காண... டிரைலரிலேயே பாதி கதை புரிகிறது... தெரிகிறது. கீர்த்தி சுரேஷை காதலிக்க தான் லேடி வேடம் போடுவார் என்று எதிர்பார்த்தால், சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க தான் பெண் வேடம் போடுவது போல் வருகிறது.


அதில் அப்படியே கீர்த்தி சுரேசுடன் காதல், மோதல் என படம் ஜாலியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கி விட்டது. டிரைலரின் இறுதியில் கவுண்டமணி ஸ்டைலில் ‘பார்த்துட்டான் பார்த்துட்டான்’ என்று கத்துவது செம மாஸ் காமெடி... போங்க...


கபாலி போஸ்டரை பார்த்து சூப்பர் ஸ்டார் மாதிரி வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார். இந்த படம் அவருக்கு உண்மையாகவே வேற லெவல் தான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: