தனுஷிற்கு சினிமாவில் நடிப்பதையும் தாண்டி மிகப் பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. அதையும் தற்போது தன் சொந்த்த படம் பவர்பாண்டி படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
இன்னும் இரண்டு நாளில் திரையில் படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை பிள்ளைகள், உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஏமாந்து இருந்துவிடாமல் தங்களுக்கு என பணம் சேமிக்க வேண்டும் என்ற கருத்தை ப.பாண்டி படத்தில் கச்சிதமாக முன்வைத்துள்ளார் தனுஷ்.
படத்தை பார்த்து ஆச்சரியத்தில் அசந்துபோன ரஜினி இந்த ஒரு படம் போதும் அடுத்த 10 வருஷத்துக்கு அனைவரும் உங்களை பற்றியே பேசிக் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அடுத்தடுத்து படம் இயக்கி அந்த நல்ல படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என ரஜினி தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
click and follow Indiaherald WhatsApp channel