'வாகா' திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு 'வீர சிவாஜி' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 23-ந்தேதி இப்படம் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


ஆனால் எதிர்ப்பார்த்தபடி இப்படம் வெளிவரவில்லை. இந்நிலையில், படக்குழுவினர் இந்த படத்தை வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


விக்ரம் பிரபு, ஷாமிலி, மொட்டை ராஜேந்திரன், மகாநதி ஷங்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'தகராறு' திரைப்பட இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். 


மேலும் இந்த படம் தணிக்கை குழுவினரிடம் இருந்து அண்மையில் 'யு' தர சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: