சென்னை:
நன்றி... நன்றி... என் மகனை ஊக்கப்படுத்தி உயர்த்திய "தல"க்கு நன்றி என்று பெருமிதப்பட்டுள்ளார் இவர். யார் தெரியுங்களா?


இப்போ... போதையால் விபத்து ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ள அருண் விஜய்யின் அப்பா விஜயகுமார்தான். ஆனால் இது வேற மேட்டரு. என்னன்னா?


"தல"க்கு யார் எந்த வேலையில் ஜொலித்தாலும் உடனடியாக பாராட்டுவது அவரது சுபாவம்... சில வெளியில் வந்து விடுகிறது. பல விஷயங்கள் வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறது. 


அப்படிதான் கோலிவுட்டில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அருண் விஜய்யை தன்னுடன் நடிக்க வைத்தார் தல... என்னை அறிந்தால் படத்தில்.


இதில் அருண் விஜய்க்கு செம வரவேற்பு கிடைத்தது அனைவரும் அறிந்த ஒன்று. இப்போ... இவரது மார்க்கெட் சற்று உயர்ந்துள்ளது. இதற்குதான் நன்றி சொல்லியிருக்கிறார் விஜயகுமார்.


எங்கே தெரியுங்களா? அருண் விஜய் நடித்த குற்றம்-23 படத்தின் இசை வெளியீட்டு விழாவில்... என் மகனை ஊக்கப்படுத்தி இந்த இடத்திற்கு கொண்டு வந்த அஜித்திற்கு நன்றி என்று மேடையிலேயே ஓப்பன் டாக் கொடுத்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: