'இறைவி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'தர்மதுரை'. இந்த படத்தை சீனு ராமஸ்வாமி இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த மூன்றாவது திரைப்படம் 'தர்மதுரை' என்பது குறிப்பிடத்தக்கது. 


தர்மதுரை திரைப்படத்தில் விஜய் சேதுபதி டாக்டராக நடித்துள்ளார். இதில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளன. 


வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி, இந்த படத்தின் பாடல்கள் வெளிவருகிறது. இதையடுத்து தர்மதுரை, வரும் ஆகஸ்ட் 12-ந்தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். 



Find out more: