மும்பை:
இதை சறுக்கல் என்பதா... அல்லது சாதனையின் தூரம் குறைந்தது என்று சொல்வதா! என்ன விஷயம் தெரியுங்களா?


இயக்குனர் முருகதாஸ் படத்தில் நடிக்க நான்... நீ என்று பல நடிகர்கள் க்யூ கட்டாத குறைதான். ஏன்னா... இவர் 100 கோடி ரூபாய் வசூல் இயக்குனர் என்பதால். இந்நிலையில் இவர் எடுத்த அகிரா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைதான் பெற்றது. 


ஆனால் இதற்கு உலை வைப்பது போல் ஒரு சில வட இந்தியா மீடியாக்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை குறைத்து விட்டதாம். அகிரா இதுவரை ரூ.35 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். ஆனால் படம் ஹிட் என்பதுதான் விஷயம்.


முருகதாஸ் தொடர்ந்து நான்கு ரூ.100 கோடி வசூல் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதுவும் சாதனையில் சேருமா... சேராதா என்பதுதான் பாலிவுட்டில் செம டாக்காக உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: