பிஜீங்:
இரண்டு மலை... அரை கிலோ மீட்டர் நீளம், உயரம் 980 அடி என்ன தலையை சுற்றுதா... இந்த அமைப்புல ஒரு கண்ணாடி பாலம்... என்னது கண்ணாடி பாலமா? என்று அதிர்ச்சி அடையாதீர்கள். கண்ணாடி பாலமேதான்... இது சீனாவில் அமைந்திருக்கு.


சீனாவின் ஹீனான் மாகாணத்தில் ஜாங்ஜியாஜீ பகுதியில் உள்ள யூண்டா மலைப்பகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான இந்த கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி. கண்ணாடின்னா உடைஞ்சா நடந்து போறவங்க கதி அதோகதிதானே. உங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்திடுவோம்னு... அதிகாரிகள் இல்லாம தன்னார்வலர்களை களம் இறக்கியது அரசு.


சுத்தியால் அந்த கண்ணாடி பாலத்தை அவர்கள் உடைக்க செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவ்வளவு ஸ்ட்ராங்க் அந்த கண்ணாடிகள். சரி உடைக்க முடியலை ஒத்துக்கறோம். அதிக வெயிட்டை தாங்குமா? அடுத்த சந்தேகம் அதுதானே.


அதையும் சரி செய்திடுவோம். 11 பேர் உட்கார்ந்திருந்த  பெரிய சைஸ் கார் ஒன்றும் இந்த கண்ணாடி பாலம் மீது ஓட்டி பரிசோதிக்க கண்ணாடி கொஞ்சம் கூட அசைஞ்சு குடுக்கலையே... தன்னார்வலர்கள் கட்டை விரலை காட்டி சூப்பர் என்று சொல்லியிருக்காங்க.


మరింత సమాచారం తెలుసుకోండి: