
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இன்னும் நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரது அரசியல் ஆசையை அவரது நெருங்கிய நண்பர் ராம் பகதூர் மூலமும், தமிழருவி மணியன் மூலமும் ஊடகங்களுக்கு தெரிவித்துவிட்டார். இதனால் மனம் குளிர்ந்த ரஜினி ரசிகர்கள் 'தலைவர்' எப்போது அவர் கட்சியை தொடங்குவார், நாம் எப்போது 'தலைவரின்' அருமையான கொள்கைகளை பிரசாரம் செய்வது என்று அடுத்த கட்ட திவிர நடவடிக்கை குறித்து யோசனையில் உள்ளனர்.

சென்னையில் தமிழ் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், மக்கள் விரும்பினால் தான் கண்டிப்பாக அரசியலுக்கு வர தயார். ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பின்னர், எனது அணியில் அவரை இணைத்துக்கொள்ள தயார் என்றும் அவர் பேசியிருந்தார்.
click and follow Indiaherald WhatsApp channel