சென்னை:
ரெமோ படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது சிவகார்த்திகேயன் படம் என்பதை தாண்டி அதில் அவர் நடித்துள்ள பெண் வேடத்தை பார்க்கத்தான். இப்போ வந்துள்ள செய்தி... ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. என்ன செய்தி தெரியுங்களா?


பர்ஸ்ட் லுக்கிலேயே கலக்கியது ரெமோவின் நர்ஸ் கெட்டப். சிவகார்த்திகேயனின் அழகோ... அழகு பற்றி ரசிகர்கள் சொல்லி சொல்லி மாய்ந்து போய் வருகின்றனர். பல கஷ்டங்களை தாண்டி சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமா? பெண் குரலிலேயே பேசியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நர்ஸ் வேடத்துக்கு ஒரு "பில்டப்" பாடலும் இருக்காம். அதான் லேட்டஸ்ட் செய்தி... மீசை பியூட்டி என்று தொடங்கும் அந்த பாடலின் சிங்கிள் டிராக்கை சீக்கிரமே வெளியிடுவாங்க என்று சொல்றாங்க... சொல்றாங்க...



Find out more: