சென்னை:
நெருப்பின்றி புகையாது என்பதை விஷால் ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். எப்படி தெரியுங்களா?


வரலட்சுமியுடன் விஷால் நெருங்கி இருக்கும் செல்பி படம்தான் இப்போதைய இணையதள வைரல் படம் என்றால் மிகையில்லை. ஆனால் இந்த புகைப்படத்தை பதிவேற்றியது வேறு யாரும் இல்லை. விஷால்தான். 


விஷாலும், வரலட்சுமியும் காதலர்கள். திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பது கோலிவுட்டை ரவுண்டு கட்டி அடித்து வரும் செய்தி. இதை உண்மை என்பதுபோல தற்போது இந்த செல்பி போட்டோவை விஷால் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையில் ஒரு லட்சுமி இருப்பார் என்று விஷால் கூறியதும் ஞாபகத்திற்கு கொண்டு வாருங்கள்.


இப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை விஷால் பதிவேற்றி உள்ளதால் தாங்கள் இருவரும் காதலர்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாரோ என்று கேட்கின்றனர் கோலிவுட் கோபாலுகள். ஆனால் பதில்தான் இருவரிடமும் இருந்து கிடைக்கலை.


మరింత సమాచారం తెలుసుకోండి: