நடிகர் பிரசன்னா தற்போது 8 வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு புதுப்படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா....
கெஸ் பண்ண முடியவில்லையா... சரி விடுங்க.... நானே சொல்லிடறேன்... நம்ம 'துப்பறிவாளன்' தான். விஷால், ராகுல் ப்ரீத் சிங்க் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க போகிறாராம்.
இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. மேலும் ஏற்கனவே பிரசன்னா, மிஸ்கின் இயக்கிய 'அஞ்சாதே' திரைப்படத்தில் வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.