புதுடில்லி:
பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க... இரு மாநில மக்களும் அமைதி காத்திடுங்க என்று வேண்டுகோள் விட்டுள்ளார் பிரதமர் மோடி.
காவிரி நீர் திறக்கப்பட்ட விவகாரத்தில் குளிர் நகர் பெங்களூரு பற்றி எரிகிறது. அங்கு தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி விவகாரத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் பெரும் வேதனை அளிக்கிறது. உணர்வுப்பூர்வமான விஷயத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. சட்டத்தை கையில் எடுப்பதும், அதை மீறுவதும் சரியல்ல. சட்டத்திற்கு உட்பட்டே தீர்வு காண முடியும்.
இரு தரப்பு மக்களும் பேசி தீர்க்க வேண்டும். எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. நாட்டின் நலனே முக்கியம் என மக்கள் உணர வேண்டும். இரு மாநில மக்கள் அமைதி காத்திட வேண்டும். தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதெல்லாம் சரிங்க பிரதமர் ஜி... காவிரி பிரச்னையில் இதுவரை மத்திய அரசு ஏன் இவ்வளவு பொறுமை காத்து இருந்தது. இரு மாநில மக்களுக்கும் நல்லபடியாக பேசி தீர்த்து கொடுத்து இருக்கலாமே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.